மதுரை கோவை திருச்சி சென்னை ரோட்டோர கடையில் வைக்கும் எம்ப்ட்டி சால்னா அதே சுவையில் உங்கள் வீட்டில் வைத்து பாருங்கள் மிக அற்புதமாக சுவையாக இருக்கும்
https://tamilskytv.blogspot.com/2024/12/blog-post.html
ஒரு வடசட்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் எண்ணெய் ஊற்றி அதில் கல்பாசி , பட்டை கிராம்பு , ஏலக்காய் , மராட்டிமொக்கு , ஸ்டார்பூ எல்லாத்துலயும் ஒன்று போடவும்
கூடவே சோம்பு, சீரகம்,, மிளகு, 5 சின்னவெங்காயம் ,
4 முந்திரி
ரெண்டு துண்டு தேங்காய்
3 பல்லு பூண்டு
ஒரு சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அத்தனையும் நங்கு வதக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கவும்
அதே கடாயில் கூடுதல் எண்ணெய் ஊற்றி சோம்பு
பச்சைமிளகாய்
சேர்த்து தாளிக்கவும்
கூடவே ஒரு பெரிய வெங்காயம் கருவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு ஒரு கைப்பிடி புதினா
கூடவே ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ,
அரை ஸ்பூன் மல்லித்தூள்
சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
உப்பு கூடவே அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து
2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் நல்ல வாசனையோடு குருமா ரெடி




